வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி விவசாயிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தை சேர்ந்த பெருஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி விவசாயிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இந்த ஆண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், வழுவூர் அரிவேளுர், பண்டாரவடை பெருஞ்சேரி ஆகிய 4 கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்க்கடன் வேண்டி விண்ணப்பித்துள்ள நிலையில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரே குடும்பத்தில் பல பேருக்கு கடன் வழங்கி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்து விவசாயிகள் நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வாசலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையால் வங்கி வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோசடி குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். பயிர்க்கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் விவசாய கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story