மாவட்ட செய்திகள்

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + kanja merchant arrest in gundas act

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கம்பம் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கம்பம்:
கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 31) இவர் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி கம்பம் புறவழிச்சாலை வழியாக ஆட்டோவில் 28 கிலோ கஞ்சா கடத்தி வந்தார். அப்போது அவரை கம்பம் வடக்கு போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
 வைரமுத்து மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து வைரமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.