குத்தாலம் அருகே தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம் - போலீசார் விசாரணை


குத்தாலம் அருகே தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 July 2021 8:14 PM IST (Updated: 29 July 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமானது. இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு மெயின் ரோட்டை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கார்த்திக் ஆகியோரின் கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. மேலும் இவர்களின் வீட்டில் எரிந்த தீ பரவி எதிரே உள்ள சுரேஷ் என்பவரின் கூரை வீடு பாதியளவு எரிந்து சேதமானது. 

இதில் வெங்கடேஷ் என்பவர் இருசக்கர வாகனம் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. உடனடியாக குத்தாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்து அவர்கள் தீயை அணைத்தனர். 

இதனை அறிந்த எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், குத்தாலம் தாசில்தார் பிரான்சுவாஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட உதவிகளை வழங்கினர்.

Next Story