தங்கை காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்தார்: விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
தங்கை காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி,
கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பனை அடுத்த இலங்குடியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது20). சமீபத்தில் இவரது தங்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால் மனவேதனை அடைந்த ஜெயராஜ் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்)குடித்து மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ெஜயராஜை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story