கருத்துக்கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


கருத்துக்கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 July 2021 10:03 PM IST (Updated: 29 July 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

தாணிக்கோட்டகத்தில் தீவனப்புல் வளர்ப்பது தொடர்பாக நடந்த கருத்துக்கேட்டு கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாய்மேடு:
தாணிக்கோட்டகத்தில் தீவனப்புல் வளர்ப்பது தொடர்பாக நடந்த கருத்துக்கேட்டு கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
கருத்துக்கேட்பு கூட்டம்
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் ஊராட்சி தெற்குகாடு சொக்கட்டான்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடை துறை சார்பில் தீவனப்புல் வளர்க்க திட்டமிடப்பட்டு அந்த இடத்தில் ஒரு பகுதி வேலி வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் தங்களது கால்நடைகளை மேய்க்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் அந்த இடத்தில் தீவனபுல் வளர்ப்பது குறித்து பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கால்நடை துறை உதவி இயக்குனர் சுப்பையன், மருத்துவர் மீனாட்சிசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் அருள்குமார், ஊராட்சி தலைவர் முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர் வைத்தியநாதன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் எதிர்ப்பு
தீவனப்புல் வளர்க்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் பல ஆண்டுகளாக எங்களது கால்நடைகளுக்கு மேய்ச்சல் இடமாக பயன்படுத்தி வருகிறோம். அந்த இடத்தில் தீவனப்புல் வளர்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பதாக கூறி விட்டு அங்கிருந்து அதிகாரிகள் சென்று விட்டனர்.

Next Story