பாறைக்குழிதண்ணீரில் மூழ்கி மாணவன் பலி


பாறைக்குழிதண்ணீரில் மூழ்கி மாணவன் பலி
x
தினத்தந்தி 29 July 2021 11:34 PM IST (Updated: 29 July 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பாறைக்குழிதண்ணீரில் மூழ்கி மாணவன் பலியானான்.

நல்லூர்
திருப்பூரில் பாறைக்குழிதண்ணீரில் மூழ்கி மாணவன் பலியானான்.
மாணவன்
திருப்பூர் விஜயாபுரம், மாகாளியம்மன் கோவில் முதல் வீதியை சேர்ந்தவர்  தினகரன். பனியன் நிறுவன பிரிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி தவமணி. இவர்களது  இரட்டை குழந்தைகள் சஞ்சய்வயது 13, சரண் 13. இவர்கள் இருவரும் விஜயாபுரம் அரசினர் மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பெற்றோர் வழக்கம் போல்   வேலைக்கு சென்றுள்ளனர். 
பின்னர் 11 மணியளவில் சஞ்சய், சரண் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து , முதலிபாளையம் பிரிவு அடுத்துள்ள தனியார் பள்ளி எதிரில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்க சென்றுள்ளனர். சரணுக்கு நீச்சல் தெரியாது. அதனால் பாறைக்குழியில் ஒரு ஓரமாக குளித்துக்கொண்டிருந்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு பகுதியில் சஞ்சய் மற்றும் நண்பர்களுடன் பாறைக்குழியில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று  சரண்  நீரில் மூழ்கியதால் காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டான். 
உடல் மீட்பு
உடனே அவனை காப்பாற்ற மற்ற சிறுவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் வீட்டிற்கு வந்து  சஞ்சய்  தனது பெற்றோரிடம்  கூறியுள்ளார். உடனே அவர் பாறைக்குழியில் நீந்தி மூழ்கி தேடிய போது அங்கு தண்ணீருக்குள் பிணமாக சரண் உடல் கிடப்பது தெரியவந்தது.  அது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமிமற்றும் போலீசார் சென்று மாணவன் சரண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story