லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்
சிவகாசியில் லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி, ஜூலை
சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே லாரி ஒன்றில் அரிசி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக அந்த லாரி அதே இடத்தில் நின்றதால் சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்கள் லாரி டிரைவரிடம் விசாரணை செய்தனர். அப்போது லாரியில் இருந்த அரிசி மூடைகள் சிவகாசி பகுதியில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் இருந்து பெறப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரவு 10 மணிக்கு பின்னர் பொது மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் ரேஷன் கடைகளை திறந்து அரிசி மூடைகளை லாரியில் ஏற்றி உள்ளனர். ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story