பஞ்சு குடோனில் தீவிபத்து


பஞ்சு குடோனில் தீவிபத்து
x
தினத்தந்தி 30 July 2021 12:18 AM IST (Updated: 30 July 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே பஞ்சு குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலையில் பஞ்சு குடோனில் நேற்று பிற்பகலில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கழுகுமலை தீயணைப்பு அலுவலர் லிங்கத்துரை, வாசுதேவநல்லூர் தீயணைப்பு அலுவலர் ஷேக்அப்துல்லா ஆகியோர் தலைமையிலும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. 

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story