குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் ஆறாக ஓடிய தண்ணீர்
நெல்லை சந்திப்பில் குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் தண்ணீர் ஆறாக ஓடியது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த வளாகம் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பித்து கட்டப்படுகிறது. இதையொட்டி குடிநீர் தொட்டிக்கு குறுக்குத்துறை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் குழாயை மாற்றி பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் இந்த பணி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முயற்சி செய்த போது குழாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த உடைப்பு மூலம் தண்ணீர் வெளியேறி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் பம்பிங்கை நிறுத்தி, உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இங்கிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும் சிந்துபூந்துறை, செல்விநகர், மேகலிங்கபுரம் உள்ளிட்ட 4, 5-வது வார்டு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கினர்.
இன்று (வெள்ளிக்கிழமை) குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு, குடிநீர் வினியோகம் சீராகி விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story