இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சார்பில் முப்பெரும் விழா
இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடமலாப்பூரில் புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:- இந்த நிறுவனத்தில் அன்னவாசல், அரிமளம், குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை மற்றும் திருவரங்குளம் ஆகிய வட்டாரங்களில் உள்ள 55 கிராமங்களை சேர்ந்த 1,028 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த வகையில் இந்நிறுவனத்தின் 14-ம் ஆண்டு பாரம்பரிய விதைத் திருவிழா, பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் 8-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தால் பாரம்பரிய அரிசி வகைகள், பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. நிறுவனம் பங்குதாரர்களின் விளைபொருட்களை கொள்முதல் செய்து, மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், பொதுமக்களுக்கும் சத்தான உணவு பொருட்கள் வழங்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. எனவே பொதுமக்கள் பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதில் வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சங்கரலெட்சுமி, நபார்டு திட்ட மாவட்ட வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் தனபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story