ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பேரவை கூட்டம்


ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பேரவை கூட்டம்
x
தினத்தந்தி 30 July 2021 12:35 AM IST (Updated: 30 July 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.

கரூர்
கரூர் காந்திகிராமத்தில் நேற்று காலை தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர் கோரிக்கை மாநாட்டு விளக்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், கவுரவ தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், கட்டுமான தொழிலாளிகளின் குழந்தைகள் கல்விச்செலவை வாரியமே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்டுமான தொழிலாளியின் விபத்து நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதில் சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் ரத்தினம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் வடிவேலன், மாநில துணை செயலாளர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story