மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி


மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
x
தினத்தந்தி 30 July 2021 12:40 AM IST (Updated: 30 July 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.

தளவாய்புரம்,ஜூலை.
சேத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த கருப்பாயி (வயது 90) என்ற மூதாட்டி மாடி வீட்டில் வசித்து வருகிறார். கண் பார்வை சரியாக தெரியாததால் நேற்று வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story