பட்டாசுகளை வைத்திருந்த கட்டிடத்துக்கு சீல்


பட்டாசுகளை வைத்திருந்த கட்டிடத்துக்கு சீல்
x
தினத்தந்தி 30 July 2021 1:01 AM IST (Updated: 30 July 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வைத்திருந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

விருதுநகர்,ஜூலை
விருதுநகர் அருகே ராமலிங்காபுரத்தில் வெங்கால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அக்கையா என்பவர் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 230 கிலோ பட்டாசு ரகங்கள் வைத்திருந்தார். இதனை கண்டுபிடித்த சிறப்பு ஆய்வுக் குழுவினர் அந்த கட்டிடத்துக்கு சீல் வைத்தனர். மேலும் இது பற்றி சின்னவாடியூர் கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் அக்கையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story