கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு
கர்நாடகத்தில் கொரோனா புதிய பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியதால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 48 ஆயிரத்து 861 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 2,052 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,332 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 41 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரு நகரில் புதிதாக 506 பேர், தட்சிண கன்னடாவில் 396 பேர், ஹாசனில் 136 பேர், குடகில் 96 பேர், மைசூருவில் 157 பேர், உடுப்பியில் 174 பேர், சிக்கமகளூருவில் 90 பேர், சிவமொக்காவில் 81 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 9 பேரும், தட்சிண கன்னடாவில் 8 பேரும், கோலார், மைசூரு, உத்தரகன்னடாவில் தலா 2 பேர் என மொத்தம் 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை அதிர்ச்சி
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வந்தது. தினசரி பாதிப்பு ஆயிரம் என்ற அளவு வரை சென்றது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தொற்று பரவல் திடீரென அதிகரித்து, 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story