மாவட்ட செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Transport workers protest

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்: 

திண்டுக்கல் நாகல்நகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு சங்கத்தின் மண்டல தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் ராமநாதன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு பஸ்களுக்கு எப்.சி. வழங்கும் உரிமையை தனியாருக்கு வழங்க கூடாது, மின்சார பஸ்களை இயக்குவதற்கு அரசு போக்குவரத்து கழகத்துக்கு மானியம் வழங்க வேண்டும், 

தனியார் பங்களிப்புடன் திட்டங்களை அமலாக்கும் முடிவை கைவிட வேண்டும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.