இளம்பெண் போல பேசி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் சிக்கியது
வலைதளத்தில் இளம்பெண் போல பேசி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் சிக்கியது.
மும்பை,
வலைதளத்தில் இளம்பெண் போல பேசி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் சிக்கியது.
5 பேர் கைது
சமூக வலைதளத்தில் இளம்பெண்போல பேசி ஆபாச வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டி வருவதாக மும்பை பி.கே.சி. சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி இந்த கும்பலை சேர்ந்த இளம்பெண் உள்பட 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளிவந்தன.
அதாவது, இந்த கும்பல் சமூகவலைதளத்தில் பெண்கள் பெயரில் போலி கணக்கை உருவாக்கி நல்ல பணம் மற்றும் பின்புலம் உள்ள நபர்களை குறி வைத்துள்ளனர். அவர்களிடம் பெண் போல பேசி காதலையும், காமத்தையும் வளர்த்தெடுக்கும் இவர்கள் பின்னர் செல்போன் கேமராவின் முன் அவர்களை ஆபாச செயலில் ஈடுபட செய்தனர். அதை பதிவு செய்துகொண்டனர்.
ஆபாச வீடியோ
இவர்கள் விரிக்கும் வலையில் வசமாக சிக்கும் பணம் படைத்தவர்களை மிரட்டி, தங்கள் மகுடிக்கு பாம்பாக ஆட வைத்து பணம் கரந்து வந்துள்ளனர்.
கடந்த 2 அல்லது 3 மாதங்களில் மட்டுமே அவர்களிடம் பலர் இவ்வாறு பணத்தை இழந்துள்ளனர். குறைந்தது பாதிக்கப்பட்டவர்களின் 250 ஆபாச வீடியோ கிளிப்பை பல்வேறு மாநிலங்களில் உள்ள 80 பேருக்கு விற்று பணம் சம்பாதித்து வந்து உள்ளனர். இந்த கும்பலிடம் பல முக்கிய புள்ளிகள் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இது தொடர்பாக நாக்பூர், உத்தரபிரதேசம், ஒடிசா போன்ற இடங்களில் பதுங்கி இருந்த 5 பேரை பிடித்து கைது செய்து இருப்பதாகவும், இந்த மோசடியில் வேறு யாரும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story