சென்னை விமான நிலையம் புதுப்பிக்கும் பணி முடிந்ததும் காமராஜர், அண்ணா பெயர் பலகைகள் வைக்கப்படும்


சென்னை விமான நிலையம் புதுப்பிக்கும் பணி முடிந்ததும் காமராஜர், அண்ணா பெயர் பலகைகள் வைக்கப்படும்
x
தினத்தந்தி 30 July 2021 8:37 AM IST (Updated: 30 July 2021 8:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையம் புதுப்பிக்கும் பணி முடிந்ததும் காமராஜர், அண்ணா பெயர் பலகைகள் வைக்கப்படும் வைகோவுக்கு, மத்திய மந்திரி பதில்.

சென்னை,

டெல்லியில் மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்தவாரம் சந்தித்து பேசியபோது, சென்னை விமான நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட, அண்ணா, காமராஜர் பெயர்ப்பலகைகளை மீண்டும் அதே இடங்களில் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

இதற்கு ஜோதிர் ஆதித்யா சிந்தியா விளக்கம் அளித்து வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“சென்னை விமான நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன், காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகை மீண்டும் பொருத்தப்படும். அதேபோல், கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன், அண்ணா பன்னாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகையும் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story