கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி


கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 30 July 2021 11:42 AM IST (Updated: 30 July 2021 11:42 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 44). விவசாயி. இவருக்கு பிரமீளா (27) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று அவர் தனது வீட்டின் அருகே டிராக்டரை இயக்க முற்பட்டார். அப்போது கீழே தவறி விழுந்த ஸ்குரூடிரைவரை எடுக்க முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக முரளி டிராக்டரில் இருந்து தவறி விழுந்தார். அதற்குள் டிராக்டரும் இயங்க தொடங்கியது.

இதில் முரளி, தான் இயக்கிய டிராக்டர் சக்கரத்திலேயே சிக்கி படுகாயம் அடைந்தார்.

சாவு

இதை பார்த்த அவரது மனைவி பிரமீளா அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் முரளியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story