திண்டிவனம்-நகரி ரெயில் பாதை அமைக்கும் இடத்தை அதிகாரி ஆய்வு


திண்டிவனம்-நகரி ரெயில் பாதை அமைக்கும் இடத்தை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 30 July 2021 6:30 PM IST (Updated: 30 July 2021 6:54 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம்-நகரி ரெயில் பாதை அமைக்கும் இடத்தை அதிகாரி ஆய்வு

கலவை,

திண்டிவனம்-நகரி இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய ரெயில்வே இணை மந்திரி ஆர்.வேலு தொடங்கி வைத்தார். மாம்பாக்கம், கலவை, திமிரி, தாமரைப்பாக்கம், ஆற்காடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரெயில் திட்டம் எப்போது நிறைவேறும் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அங்குள்ள மேல்புதுப்பாக்கம், மாம்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள நீர் நிலைகள், நெடுஞ்சாலை, கால்வாய், பாட்டை புறம்போக்கு, அனாதினம், தாங்கல் ஏரி ஆகிய பகுதியில் தேர்வு செய்யப்பட்ட பகுதியை தென்னக ரெயில்வே நிலைய அலுவலர்கள் ஒப்படைத்துள்ளனர்.
 
இந்தநிலையில் நேற்று கலவையை அடுத்த மேல்புதுப்பாக்கம், மாம்பாக்கம் வழியாக திண்டிவனம்-நகரி இடையே புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கும் இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வருவாய் கோட்ட அலுவலர் (பொறுப்பு) இளவரசி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு ெசய்தனர். அப்போது நில அளவையர் வடிவாம்பாள், துணை நில அளவையர் மோகன், கலவை தாசில்தார் நடராஜன், மண்டல துணைத் தாசில்தார் இந்துமதி, வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், கிராம நிர்வாக அலுவலர் முனிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story