தூத்துக்குடியில் முடி திருத்துவோர் சங்க கூட்டம்


தூத்துக்குடியில் முடி திருத்துவோர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 30 July 2021 8:08 PM IST (Updated: 30 July 2021 8:08 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என முடி திருத்துவோர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க பேரவை கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க துணைத்தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் பொன்ராஜ், துணை செயலாளர் டென்சிங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணமும், இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்களை நலவாரியத்தில் இருந்து வழங்க வேண்டும், வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், சலூன் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். வங்கி, கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து உள்ள நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பெருமாள், பொதுச் செயலாளர் நாகராஜ், பொருளாளர் மகராஜன், துணை செயலாளர்கள் கருணாமூர்த்தி, சரவணன், மாடசாமி, வேல்முருகன், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story