வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
கோவை
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்பிரபு என்ற மச்சுபையன். இவர் கடந்த 30.8.2019 அன்று 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் பிரபுவை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ரவி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த செந்தில் பிரபுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கக்கோரி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story