திருப்பூர் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் செவிலியர்களுக்கான கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது.


திருப்பூர் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் செவிலியர்களுக்கான கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது.
x
தினத்தந்தி 30 July 2021 8:34 PM IST (Updated: 30 July 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் செவிலியர்களுக்கான கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் செவிலியர்களுக்கான கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 5 நாட்களில் 250 பங்கேற்றனர். 
செவிலியர்களுக்கான கலந்தாய்வு 
திருப்பூர் மாவட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒன்று உள்ளது. இது தவிர 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. இதில் ஒப்பந்த ஊழியர்களாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த செவிலியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். 
இந்நிலையில் இந்த ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் செவிலியர்களுக்கான கலந்தாய்வு கடந்த 26-ந்தேதி முதல் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் நடந்து வந்தது. 
250 பேர் பங்கேற்பு 
இந்த கலந்தாய்வில் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி தலைமையிலான மருத்துவ அலுவலர்கள் பங்கேற்று, செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர். 
இறுதி நாளான நேற்று மட்டும் 58 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். ஒட்டு மொத்தமாக 5 நாட்கள் நடந்த கலந்தாய்வில் 250 செவிலியர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வில் பங்கேற்ற செவிலியர்கள் மாநிலத்தின் எந்த பகுதிக்கும் இடமாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் பலரும் ஆர்வமாக கலந்தாய்வில் கலந்துகொண்டனர். 

Next Story