திருத்துறைப்பூண்டி அருகே ரூ.2 லட்சம் விதை நெல், வேளாண் கருவிகள் தீயில் எரிந்து நாசம்
திருத்துறைப்பூண்டி அருகே ரூ.2 லட்சம் விதை நெல், வேளாண் கருவிகள் தீயில் எரிந்து நாசமாயின.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோமல் ஊராட்சி ஆதனூரை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவர் தனது வீட்டுக்கு அருகே கூரை கொட்டகையில் குறுவை சாகுபடிக்கு தேவையான 20 மூட்டை விதை நெல், விவசாய பம்பு செட் மற்றும் வேளாண் கருவிகள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வைத்திருந்தார்.
நேற்று மதியம் அந்த கொட்டகையில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதை அறிந்த மாரிமுத்து எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் ஆகியோர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட விவசாயி சக்திவேலுக்கு ஆறுதல் கூறியதுடன் அவருக்கான விதை நெல் கிடைக்க விரைந்து ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.
தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து ஆலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபரஞ்சோதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story