காங்கேயம், நத்தக்காடையூர் பகுதியில் 495 பேருக்கு கொரோனா தடுப்பூசி


காங்கேயம், நத்தக்காடையூர் பகுதியில்  495 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 30 July 2021 8:55 PM IST (Updated: 30 July 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம், நத்தக்காடையூர் பகுதியில் 495 பேருக்கு கொரோனா தடுப்பூசி

காங்கேயம்
காங்கேயம், நத்தக்காடையூர் பகுதியில்  495 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சாவடிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120 பேருக்கும், பாப்பினி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 110 பேருக்கும், காங்கேயம் - பழையகோட்டை சாலையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 200 பேருக்கும் மொத்தம் 430 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
நத்தக்காடையூர்
 நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி 65 பேருக்கு கொரோனா  2-வது தவணை கோவிஷீல்டு  தடுப்பூசி போடப்பட்டது. 

Next Story