சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 July 2021 9:34 PM IST (Updated: 30 July 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்ேடா டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆண்டிப்பட்டி:
தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மகன் கார்த்திக் (வயது 23). ஆட்டோ டிரைவர். இவருக்கும், 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து அந்த சிறுமியை கார்த்திக் ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்று, பாலியல் ெதால்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
அதன்பேரில் அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிறுமிக்கு கார்த்திக் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். 

Next Story