தாயார் இறந்த துக்கத்தில் தச்சுத்தொழிலாளி தற்கொலை


தாயார் இறந்த துக்கத்தில்  தச்சுத்தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2021 9:45 PM IST (Updated: 30 July 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

தாயார் இறந்த துக்கத்தில் தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.


நிலக்கோட்டை:
திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டி காளியம்மன் கோவிலை சேர்ந்தவர் முருகன் (வயது 55). தச்சுத்தொழிலாளி. இவரது தாயார் செல்லம்மாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் திடீரென இறந்து போனார். இதனால் மனவேதனை அடைந்த முருகன் தாயாரின் நினைவாக புலம்பிக் கொண்டிருந்தார். 
இந்நிலையில் முருகன் தனது பூர்வீக ஊரான நிலக்கோட்டை அருகே உச்சனம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் அங்கு விஷம் குடித்து உயிருக்கு போராடினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story