சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2021 9:49 PM IST (Updated: 30 July 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி

வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி கிராமம் ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்ற பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன்(வயது 50) கைது செய்த போலீசார் இவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்த பழமலை மகன் ராஜமாணிக்கம்(34) என்பவரை தேடி வருகிறார்கள். 

அதேபோல் மலைக்கோட்டாலம் ஏரி பகுதியில் சாராயம் விற்ற அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பிள்ளை(60) என்பவரை வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சின்னதுரையை வலைவீசி தேடி வருகின்றனர். 


Next Story