பெண்ணாடம் அருகே தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பெண்ணாடம் அருகே தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
விருத்தாசலம்,
பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இங்கு அறுவடை செய்யப்பட்ட நெல்லை, நந்தப்பாடியில் தற்காலிகமாக அமைக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். அதுபோல் இந்தாண்டும், விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, இதுவரை தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஆனால் இதுவரை தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளரிடம் மனு கொடுத்தும் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல் உள்ளது. இதற்கிடையே பெண்ணாடம் பகுதியில் பெய்யும் மழையால், நேரடி கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைகிறது. இந்த நிலையில் தற்காலிக நேரடி கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கக்கோரி நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story