மேலும் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இறப்பு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு பெண் இறந்தார். இதற்கிடையே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த 50 வயது பெண், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, 75 வயது முதியவர் ஆகிய 3 பேர் நேற்று இறந்தனர். மேலும் 5 பெண்கள் உள்பட 21 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதே நேரம் 19 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story