ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 30 July 2021 10:53 PM IST (Updated: 30 July 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி

ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர். 

மாசாணியம்மன் கோவில் 

ஆடிவெள்ளியையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில்  சிறப்பு அபிஷேக நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.  இதேபோன்று பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள மகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 மேலும் அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

சூலக்கல் மாரியம்மன் 

பல்லடம் ரோடு மூங்கிலத்தூர் காமாட்சிஅம்மனுக்கு அன்னை அபிராமி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

மேலும் மாரியம்மன், கரியகாளியம்மன், பத்ரகாளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. சூலக்கல் மாரியம்மன் சந்தன அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து உச்சிகால பூஜையும் நடைபெற்றது. 

மாகாளியம்மன் 

இதில் கிணத்துக்கடவு, கோவை, பொள்ளாச்சி, கேரள மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ் செய்து இருந்தார். மேலும் சிங்கராம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் மாகாளியம்மன் லட்சுமி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 இதேபோல் கிணத்துக்கடவு கரியகாளியம்மன் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில், சிவலோகநாதர் சிவலோக நாயகி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story