கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு


கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 30 July 2021 11:03 PM IST (Updated: 30 July 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

கல்லல் பகுதியில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கல்லல்,

கல்லலில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.18 வயதுக்கு மேல் 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர்.இங்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதுவரை இங்கு 300 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டு உள்ளனர். இதனால் தொற்று அதிக அளவு பரவுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே சுகாதாரத்துறையும், மக்கள்பிரதிநிதிகளும் இணைந்து மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story