திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.
திருவண்ணாமலை
பணியிட மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம் திருவண்ணாமலைக்கும் (கிராம ஊராட்சி), அங்கு பணியாற்றி வந்த பழனி கீழ்பென்னாத்தூருக்கும் (கிராம ஊராட்சி), அங்கு பணியாற்றி வந்த முருகன் புதுப்பாளையத்துக்கும், (கிராம ஊராட்சி), அங்கு பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (நிர்வாகம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திராணி ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த ஸ்ரீதர் பெரணமல்லூருக்கும், (கிராம ஊராட்சி), திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேலழகன் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்
ஊரக வளர்ச்சி முகமை
திருவண்ணாமலை ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்), ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மரியதேவ்ஆனந்த் திருவண்ணாமலை ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஜவ்வாதுமலைக்கும் (கிராம ஊராட்சி), துரிஞ்சாபுவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மகாதேவன் தண்டராம்பட்டுக்கும் (கிராம ஊராட்சி), அங்கு பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி துரிஞ்சாபுரத்துக்கும் (கிராம ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story