பதுக்கிய 132 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்


பதுக்கிய 132 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 30 July 2021 11:24 PM IST (Updated: 30 July 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே பதுக்கிய 132 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே கீழமேல்குடி ரோட்டில் ஒரு தனியார் அரவை மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் மானாமதுரை வட்ட வழங்கல் அதிகாரி, உணவு கடத்தல் தடுப்பு போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரேஷன் அரிசியை குருணை ஆக்கிய 132 மூடைகள், 338 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story