மோட்டார் சைக்கிள்களில் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது


மோட்டார் சைக்கிள்களில் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 30 July 2021 5:58 PM GMT (Updated: 30 July 2021 5:58 PM GMT)

காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிள்களில் ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் பிடிபட்டார். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிள்களில் ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் பிடிபட்டார். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரேஷன் அரிசி கடத்தல்

காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக காரைக்குடி சிவில் தாசில்தார் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவில் தாசில்தார் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் கிசேந்திரன், பாஸ்கரன், விக்னேஷ் ஆகியோர் பள்ளத்தூர் பகுதியில் நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 4 மோட்டார் சைக்கிளில் ரேஷன் மூடைகளுடன் வந்தவர்கள் வருவாய்த்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவர் சிக்கி கொண்டார். மற்ற 3 பேரும் தப்பி சென்றனர்.
அவர்களிடம் இருந்த மூடைகளை பிரித்து பார்த்த போது அது ரேஷன் அரிசி என தெரிய வந்தது. மொத்தம் 1,030 கிலோ ரேஷன் அரிசி தனியார் அரிசி ஆலைக்கு கொண்டு சென்ற போது வருவாய்த்துறையினரிடம் சிக்கியது தெரிய வந்தது.

3 பேருக்கு வலைவீச்சு

பிடிபட்டவர் புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் சாத்தான் (வயது48) என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் சிவில் தாசில்தார் பிடிபட்ட சாத்தானை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்து அவர்கள் பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள் மற்றும் கடத்தி வந்த ரேஷன் அரிசி மூடைகளையும் ஒப்படைத்து புகார் அளித்தனர். இதுகுறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Next Story