கட்டிட காண்டிராக்டர் கொலையில் மேலும் ஒருவர் கைது


கட்டிட காண்டிராக்டர் கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 31 July 2021 12:20 AM IST (Updated: 31 July 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கட்டிட காண்டிராக்டர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை அருகே வடக்கு தாழையூத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் கண்ணன் (வயது 35). கட்டிட காண்டிராக்டரான இவரை கடந்த 12-ந் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக வாகைகுளத்தைச் சேர்ந்த நல்லமுத்து, சங்கிலிபூதத்தார், குரு சச்சின், நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்த அம்மு என்ற அம்மு வெங்கடேஷ், மொங்கான் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் கண்ணன் கொலை வழக்கு தொடர்பாக சிவந்திபட்டியைச் சேர்ந்த அதிசயபாண்டியை (40) போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Next Story