வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை கோர்ட்டு முன்பு நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வக்கீல் சங்க துணைச்செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் வக்கீல் சங்க தலைவர் சிவ சூரியநாராயணன், வக்கீல்கள் முத்துராஜ், திருமலைசங்கர், சிவசுப்பிரமணியன், இசக்கிபாண்டி, மகேஷ், ரமேஷ், அருண்குமார் மணிகண்டன், பிச்சாண்டி, சீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கப்படுதால் தமிழகத்திலுள்ள மற்ற பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த அரசாணையை அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story