குண்டர் சட்டத்தில் 6 வாலிபர்கள் கைது


குண்டர் சட்டத்தில் 6 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 31 July 2021 1:14 AM IST (Updated: 31 July 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் குண்டர் சட்டத்தில் 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாலமுருகன் (வயது 26), முத்துக்குமரன் (23), ராஜசேகரன் (27), விக்ரம் (27) மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்ராஜ் (28), அழகர் (19) ஆகிய 6 பேர் நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகளில் சிக்கினார்கள்.

இவர்கள் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், உதவி கமிஷனர் நாகசங்கர், மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீஹா ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

இதையொட்டி போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி போலீசார் நேற்று 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story