கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் கைது


கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2021 8:08 PM GMT (Updated: 30 July 2021 8:08 PM GMT)

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கடை விற்பனையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
சிவகாசி - விருதுநகர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நேற்று முன்தினம் இரவு ரேஷன் அரிசி மூடைகளுடன் நின்று கொண்டிருந்த லாரியை வருவாய்த்துறை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி அதில் ரேஷன் அரிசி மூடைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இதுபற்றி பறக்கும் படை தாசில்தார் சங்கர பாண்டியன், மாவட்ட உணவுப் பொருள்கடத்தல் தடுப்புபிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா நேரில் சென்று ஆய்வு செய்த போது அந்த லாரியில் 50 சாக்கு மூடைகளிலும், 182 பிளாஸ்டிக் பைகளிலும் ரேஷன்அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.  கடத்தப்பட்ட ரேஷன் அரிசி 10 டன் ஆகும். இது தொடர்பாக விசாரணை நடத்திய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த லாரி உரிமையாளர் ஐகோர்ட் மகாராஜன் மற்றும் சாட்சியாபுரம் ரேஷன் கடை விற்பனையாளர் முத்து கிருஷ்ணன் (வயது52),   ராஜபாளையத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி அஜித் குமார் (24) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் முத்துகிருஷ்ணன், அஜித் குமாரை கைது செய்து காவலுக்குஅனுப்பி வைத்தனர். லாரி உரிமையாளர் ஐகோர்ட் மகாராஜனை தேடி வருகின்றனர் கடந்த 15 நாட்களில் சிவகாசியில் இருந்து 22 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் அரிசி வினியோகத்தை முறையாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story