கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது தொற்று பரவல் குறைந்து வருகிறது. தினமும் 25 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா 3-வது அலையில் சிக்காமல் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 7-ந்தேதி வரை ஒரு வாரத்துக்கு கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மாவட்டத்தில் உள்ள 11 அரசு மருத்துவமனைகள், 72 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
கொரோனா 3-வது அலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தல், அடிக்கடி கை கழுவுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
Related Tags :
Next Story