கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வாழைக்குளம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி சிங்கம்மாள்புரத்திற்கும், பூவாணி கிராமத்தில் பணியாற்றிய பாலமுருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனுக்கும், படிக்காசுவைத்தான் பட்டியில் பணியாற்றிய அழகர் ராஜ் அத்திகுளம் செங்குளத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்குப் பகுதியில் பணியாற்றிய ராஜகுரு மம்சாபுரத்திற்கும், அத்திகுளம் செங்குளத்தில் பணியாற்றிய இந்திராகாந்தி வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், மம்சாபுரத்தில் பணியாற்றிய பெரியசாமி பொன்னாங்கண்ணி க்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனில் பணியாற்றிய கந்தராஜ் வாழைக்குளத்திற்கும், பொன்னாங்கண்ணியில் பணியாற்றிய வில்லி யாழ்வார் படிக்காசு வைத்தான்பட்டிக்கும், சிங்கம்மாள்புரத்தில் பணியாற்றிய சங்கர் பூவாணிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story