ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 31 July 2021 1:58 AM IST (Updated: 31 July 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் அட்மா சீரமைப்பு திட்டத்தின் கீழ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மாரீஸ்வரி முன்னிலை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமரன் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நுண்நீர் பாசன முறை திட்டம் தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கிக்கூறினார். மேலும் மதிப்பு கூட்டி விளைபொருட்களை விற்பனை செய்வது பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறப்பட்டது. முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.

Next Story