காரில் கஞ்சா கடத்திய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல் வழியாக காரில் கஞ்சா கடத்திய 3 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழியாக கடந்த மாதம் ஒரு கும்பல் காரில் கஞ்சா கடத்தி சென்றது. அதை அறிந்த போலீசார் ஜீப்பில், காரை துரத்தி சென்றனர். திண்டுக்கல்-பழனி சாலையில் 10 கி.மீ. விரட்டி சென்று அந்த காரை, போலீசார் மடக்கின்றனர். இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் கஞ்சாவை கடத்திய திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த நவீன் (வயது 22), பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (23), வேடசந்தூர் அருகேயுள்ள சேடப்பட்டியை சேர்ந்த பொன்அர்ஜூன் (21) ஆகியோரை கைது செய்தனர். அதை தொடர்ந்து 3 பேரும் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த 3 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story