மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா


மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா
x
தினத்தந்தி 31 July 2021 2:08 AM IST (Updated: 31 July 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா

கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு படையல் விழா எளிமையான முறையில் நேற்று நடைபெற்றது. மதுரைவீரன் சுவாமி ஆடிபடையல் அங்குள்ள மரத்தின் அடியில் கொண்டாடப்பட்டது. இதற்காக கிராமத்தினர் ஏராளமானோர் தங்களது வேண்டுதல் நிறைவேற்றும் வண்ணமாக சேவல்களை பலி கொடுத்து வழிபடுவார்கள்.
 இந்தாண்டு குறைந்தளவில் 70-க்கும் மேற்பட்ட சேவல்கள் பக்தர்களால் படையலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பின்னர் அதனை பலிகொடுத்து ஆண்கள் மட்டுமே அதனை சமைத்து மதுரைவீரன் சுவாமிக்கு படைத்தனர். சேவல் கறியுடன் மொச்சைபயறு கலந்து சமைக்கப்பட்டது. பின்னர் சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகள் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என இப்பகுதியினர் நம்பிக்கை.

Next Story