அக்காள்-தங்கை படுகொலை


அக்காள்-தங்கை படுகொலை
x
தினத்தந்தி 31 July 2021 2:14 AM IST (Updated: 31 July 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரே அருகே அக்காள்- தங்கை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் அவர்கள் பிணமாக கிடந்தனர்.

தாவணகெரே:

அக்காள்-தங்கை

  பல்லாரி மாவட்டம் கூட்லகி தாலுகா பெனகஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவுரம்மா (வயது 34). இவரது தங்கை ராதிகா (32). இதில் கவுரம்மாவுக்கு மஞ்சுநாத் என்பவருடன் திருமணம் ஆகி இருந்தது. அதுபோல் ராதிகாவுக்கும் திருமணமாகி இருந்தது. ஆனால் இருவரும் கணவரை விவகாரத்து செய்துவிட்டனர்.

  இந்த நிலையில் கவுரம்மா, ராதிகா ஆகியோர் வேலைக்காக தாவணகெரே மாவட்டம் அஞ்சனேயா காட்டன் மில் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். அந்தப் பகுதியில் உள்ள காட்டன் மில்லில் பணியாற்றி வந்தனர்.

5 நாட்களாக நடமாட்டம் இல்லை

  இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக கவுரம்மா, ராதிகா ஆகியோர் வீட்டில் நடமாட்டம் இல்லை. ஆனால் அவர்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். இந்த நிலையில் நேற்று கவுரம்மா-ராதிகா தங்கியிருந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது.

  இதனால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதன் காரணமாக சம்பவம் பற்றி வித்யாநகர் போலீசருக்கு அக்கம்பக்கத்து வீட்டினர் தகவல் கொடுத்தனர்.

அழுகிய நிலையில் பிணங்கள்

  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கவுரம்மாவும், அவரது தங்கை ராதிகாவும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களை யாரோ கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொலை செய்துவிட்டு, உடல்களை அங்கேயே போட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

வலைவீச்சு

  இந்த சம்பவம் தொடர்பாக கவுரம்மாவின் பெற் றோர் வித்யாநகர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் கவுரம்மா, ராதம்மாவை கவுரம்மாவின் கணவர் மஞ்சுநாத் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மஞ்சுநாத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story