ஜெயங்கொண்டம் பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் திடீர் சாவு


ஜெயங்கொண்டம் பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் திடீர் சாவு
x
தினத்தந்தி 31 July 2021 2:21 AM IST (Updated: 31 July 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் திடீரென இறந்தார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தார். வடமாநில வாலிபரை போன்று காணப்பட்ட அவரை போலீசார் பிடித்து லாரியில் வெளியூருக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர் மீண்டும் ஜெயங்கொண்டத்திற்கு வந்து சுற்றித்திரிந்தார். இந்நிலையில் நேற்று கணபதி நகர் கரடிகுளம் செல்லும் பாதையில் தைல மரக்காட்டில் அவர் இறந்து கிடந்தார். இதையடுத்து ஜெயங்ெகாண்டம் போலீசார், வாலிபரின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story