தாயாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுப்பு; சின்னத்திரை நடிகர் வீட்டு முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா
சிக்கமகளூருவில் இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிவிட்டு சின்னத்திரை நடிகர் தலைமறைவாகி விட்டார். தற்போது குழந்தை பிறந்துவிட்ட நிலையில் கைக்குழந்தையுடன் இளம்பெண் நடிகரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிக்கமகளூரு:
சின்னத்திரை நடிகர்
கன்னட சின்னத்திரையில் வில்லனாக நடித்து பிரபலமானவர் உமேஷ்(வயது 35). இவரது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் கலசாபுரா கிராமம் ஆகும். வேலை நிமித்தமாக இவர் பெங்களூருவில் தங்கி இருந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவை சேர்ந்த பூர்ணிமா(24) என்ற பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது இருவருக்கும் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கை தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனால் பூர்ணிமா கர்ப்பமானார்.
இதையடுத்து அவரை திருமணம் செய்து கொள்வதாகவும், தற்போது கர்ப்பத்தை கலைத்துவிடும்படியும் கூறி உமேஷ் சிக்கமகளூருவுக்கு அழைத்து வந்து ஒரு வீட்டில் தங்க வைத்தார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார்.
போலீஸ் விசாரணை
தற்போது பூர்ணிமாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 4 மாதங்களாகிறது. இதையடுத்து பூர்ணிமா தனது குழந்தையுடன் நடிகர் உமேசின் சொந்த ஊரான கலசாபுராவிற்கு சென்று அவரது வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது கணவரான சின்னத்திரை நடிகருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி கூறி கதறி அழுதார்.
இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூர்ணிமாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் இதுபற்றி சிக்கமகளூரு புறநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story