சேலம் மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு சிறுவன் உள்பட 3 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்,
84 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 95 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 84 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 45 பேரும், ஆத்தூர் பகுதிகளில் 8 பேரும், நகராட்சி பகுதிகளில் 5 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 13 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 321 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 154 பேர் குணமடைந்து விட்டதால் வீடு திரும்பினர். தொடர்ந்து 1,198 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவனும் மற்றும் 80 வயதுடைய முதியவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தனர். இதேபோல் 70 வயதுடைய மூதாட்டி கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் பலியானார். இவர்கள் உள்பட கொரோனாவுக்கு இதுவரை மாவட்டத்தில் 1,550 பேர் உயிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story