சாலையில் உருண்டு விழுந்த கற்கள்


சாலையில் உருண்டு விழுந்த கற்கள்
x
தினத்தந்தி 31 July 2021 4:35 AM IST (Updated: 31 July 2021 4:35 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் உருண்டு விழுந்த கற்கள்

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. தற்போது மழை குறைந்து அவ்வப்போது வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் சாலையோரத்தில் உள்ள மண் ஈரப்பதமாக இருப்பதால் மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளது. 

இந்த நிலையில் நேற்று ஊட்டி அருகே எல்லநள்ளியில் இருந்து கேத்தி பாலடா செல்லும் சாலையில் கற்கள் உருண்டு விழுந்தன. கேத்தி ரெயில் நிலையம் அருகே இந்த கற்கள் சாலையோரத்தில் விழுந்து கிடக்கிறது. மேலும் பாறைகள் விழும் அபாயம் உள்ளது. 

இதனால் அந்த வழியாக காய்கறிகளை ஏற்றி செல்லும் சரக்கு வாகன ஓட்டிகள், விவசாய வேலைகளுக்கு வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் அரசு பஸ்கள் கிராமப்புறங்களுக்கு சென்று வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story