ஓய்வு பெற்ற அன்றே ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்; வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஏற்பாடு


ஓய்வு பெற்ற அன்றே ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்; வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஏற்பாடு
x
தினத்தந்தி 31 July 2021 4:05 AM GMT (Updated: 31 July 2021 4:05 AM GMT)

சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 சி.அமுதா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.), பி.எப். திட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற அன்றே ஓய்வூதிய பலன்களுக்கான உத்தரவுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் இந்திய எண்ணெய் கழகம் (ஐ.ஓ.சி.), அசோக் லேலாண்ட், இண்டகிரேட்டட் எண்டர்பிரைசஸ், எஸ்.ஆர்.எப். ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய உத்தரவுகள் நேற்று வழங்கப்பட்டன.

இந்த உத்தரவுகளை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சுதிர்குமார் ஜெய்ஸ்வால் வழங்கினார். உதவி கமிஷனர் பி.சீனிவாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story