மாவட்ட செய்திகள்

3 வயது மகளை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Mother commits suicide by killing 3 year old daughter

3 வயது மகளை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை

3 வயது மகளை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை
ஓச்சேரி அருகே கணவர் தகராறு செய்ததால் மனமுடைந்த பெண் நாற்காலியில் தனது 5 வயது மகனை அமர வைத்து வயரால் கட்டிப்போட்டு விட்டு, 3 வயது மகளை கொன்று தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பாக்கம்

ஓச்சேரி அருகே கணவர் தகராறு செய்ததால் மனமுடைந்த பெண் நாற்காலியில் தனது 5 வயது மகனை அமர வைத்து வயரால் கட்டிப்போட்டு விட்டு, 3 வயது மகளை கொன்று தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த விவரம் வருமாறு:-

குடிபோதையில் தகராறு

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த நடுசித்தஞ்சி எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 40), விவசாயி. இவரின் மனைவி வெண்ணிலா (35). இவர்களுக்கு 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

 அவர்களுக்கு கீர்த்தி (5) என்ற மகனும், ஹரிதா (3) என்ற மகளும் உண்டு. தயாளனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவர், அடிக்கடி குடித்து விட்டு வந்து போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

அதேபோல் நேற்று இரவு தயாளன் மீண்டும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் நள்ளிரவு தனது தாய் தாயம்மாளின் வீட்டின் முன் பகுதியில் உள்ள திண்ணையில் படுத்துத் தூங்கினார். 

வீட்டில் இருந்த வெண்ணிலா கணவரின் சித்ரவதையால் மனமுடைந்து தனது மகன் கீர்த்தியை நாற்காலியில் அமர வைத்து, வயரால் கட்டிபோட்டார்.

 தூங்கி கொண்டிருந்த தனது மகள் ஹரிதாவை வீட்டின் பின் பகுதிக்கு தூக்கி சென்று அங்கிருந்த ஒரு மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு மகளை தொங்கவிட்டு கொன்று விட்டு, அதே சேலையால் வெண்ணிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மின்வயரை அறுத்து எழுந்து தகவல் தெரிவித்த சிறுவன்

இதற்கிடையே, நள்ளிரவில் நாற்காலியில் அமர வைக்கப்பட்டு இருந்த சிறுவன் கீர்த்தி மின்வயரை அறுத்துக்கொண்டு எழுந்து வந்து வீட்டில் தனது தாயை தேடிப்பார்த்தான். வீட்டில் தாயார் இல்லாததால் பின் பக்கம் சென்று பார்த்தான். அங்குள்ள மரத்தில் தாயாரும், தங்ைகயும் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து திடுக்கிட்டான். 

அழுது கொண்டே அருகில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு வந்து, அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பி தாயும், தங்கையும் தூக்கில் தொங்குவதாகக் கூறினான். 

தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீட்டின் பின்பக்கம் ஓடி வந்து பாா்்த்தனா். அங்கு தூக்கில் தொங்கிய வெண்ணிலாவையும், ஹரிதாவையும் பார்த்து கூச்சலிட்டு கதறி துடித்தனர். 

அவர்களின் கூச்சல் சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள் அனைவரும் எழுந்து வந்து தயாளனின் வீட்டின் பின் பக்கம் கூடி கண்ணீர் விட்டு அழுதனர்்.

வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

அப்பகுதி மக்கள் உடனே அவளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாய், மகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வெண்ணிலாவின் அண்ணன் கலைவாணன் (40) அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

வெண்ணிலாவுக்கும், தயாளனுக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

குடிபோதையில் கணவர் தகராறு செய்து வந்ததால் மனமுடைந்த பெண் தனது மகளை தூக்கில் தொங்க விட்டு கொன்று தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.